டெலிகிராம் –ல் வரும் விளம்பரங்களை நம்பாதீர்- போலீசார் எச்சரிக்கை

வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:09 IST)
நவீன உலகத்தில் மக்கள் பரவலாக ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த ஸார்ட் போன் மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் விளைவால் பலரும் மோசடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம், இமெயில் போன்ற செயலிகளுக்கு தகவல் மற்றும் லிங்ஸ் அனுப்பி அவர்களிடமிருந்து பண மோசடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மைக் காலமாக ஆன்லன் ஜாப், வொர்க் ஃப்ரம் ஹோம் போன்ற விளம்ரங்கள் பற்றிய விளம்பரங்கள் மூலம் மோசடி நடந்து வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் இந்த மாதிரி விளம்பரத்தின் மூலம் சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பது போல் நடித்து, பிரீமியம் டெஸ்க், லக்கி டெஸ்க் விஐபி கஸ்டமர் எனக்கூறி அதன் மூலம் ஏமாற்றுவார்கள் என தாம்பரஸ் மா நகர சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்