டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது.. பிரான்ஸ் காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

Siva

ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (07:28 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் என்பவர் அதிரடியாக பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் இதற்கு கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டெலிகிராம் நிறுவனம் செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டின் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த செயலிக்கு தடை விதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்