பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியில் தங்கம் புதைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து பொதுமக்கள் தங்கத்தை தோண்ட அந்த நதி அருகே குவிந்திருப்பதிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து நதி இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் சொந்தமாக உள்ளது. நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நதியின் அருகே அதாவது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் அருகே 32 கிலோமீட்டர் ஆழத்தில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டெக்டோனிக் பிளேட்டுகள் மோதி மலை உருவான போது அப்போது ஏற்பட்ட அரிப்பு காரணமாக தங்க துகள்கள் சிந்து நதியின் அடித்து வரப்பட்டு கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த மக்கள் சிந்து நதி நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.