66 மனித உயிர்களை காவு வாங்கிய ஐபோன் பேட்டரி??

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2017 (11:11 IST)
எகிப்து விமானம் MS804, பாரிஸ் நகரில் இருந்து கெய்ரோ நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது மத்திய தரைக்கடல் பகுதியில்  திடீரென வெடித்து சிதறியது. 


 
 
கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி, எகிப்து விமானம் திடீரென வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த 66 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் விளைவாகவே வெடித்துச் சிதறியதாக தெரியவந்துள்ளது. 
 
கருப்பு பெட்டியின் மூலம் ஆய்வு செய்ததில், ஐபோன் பேட்டரி சூடாகி, தீப்பொறி ஏற்பட்டிருக்கலாம் என்றும், தொடர்ந்து என்ஜினில் தீ பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் இந்த தகவல் போதிய ஆதாரங்களுடன் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்