சிங்கப்பூரில் அதிகரிக்கும் வேலைக்குறைப்பு… நாடு திரும்பும் இந்தியர்கள்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:04 IST)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அதிகரிக்கும் வேலைக் குறைப்பு காரணமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியர்கள் அதிகளவில் நாடு திரும்புகின்றனர்.

கொரோனா காரணமாக உலகளவில் பல லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் சிங்கப்பூர் நாட்டில் அதிகளவில் இந்தியர்கள் வேலைப் பார்த்து வருகின்றனர். அங்கு இப்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருவதால் , பல இந்தியர்கள் வேலை இழந்து தாய்நாட்டுக்கு திரும்புவதாக இந்திய தூதரக உயர் ஆணையர் பி. குமரன் தெரிவித்துள்ளார்.

தினசரி குறைந்தது 100 பேராவது இந்தியா திரும்ப தூதரகத்தை நாடுவதாக அவர் சொல்லியுள்ளார். சிங்கப்பூரில் அதிகளவில் தமிழகர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்