கொரோனாவால் குவைத்தில் பலியான இந்திய பல் மருத்துவர்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:32 IST)
கொரோனா பாதிப்பால் குவைத்தில் பணிபுரிந்து வந்த 54 வயது இந்திய பல் மருத்துவர் பலியாகியுள்ளார்.

அரபு நாடுகளில் கொரோனாவால் அதிகளவிலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அதிகமாக பணி புரிந்து வரும் இந்தியர்களுக்கும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குவைத்தில் 15 ஆண்டுகளாக பல் மருத்துவராக பணியாற்றி வந்த  வாசுதேவா ராவ் (54). என்பவருக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து சிகிச்சைப் பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதன் மூலம் குவைத்தில் கொரோனாவால் பலியான மருத்துவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்