இம்ரான் கானை இந்தியாவில் பொம்மை பிரதமர் என்று அழைக்கிறார்கள்… நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (09:42 IST)
இந்தியாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பொம்மை என்றுதான் அழைக்கிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் இம்ரான் கான். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பாகிஸ்தானை முன்பு ஆண்ட நவாஸ் ஷெரிப் மற்றும் பெனாசீர் பூட்டோ ஆகியவர்கள் ஊழலில் திளைத்து நாட்டையே அழித்து விட்டனர் என்று கூறியிருந்தார்.

இதற்கு இப்போது எதிர்க்கட்சி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. அதில் ‘ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தன் சாதனைகளை பட்டியலிட முடியாம்ல இம்ரான் கான் முந்தைய ஆட்சியாளர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் உடனே பதவி விலக வேண்டும்’ எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் இப்போது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தனது கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இங்கிலாந்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக கலந்துகொண்டு பேசினார். அப்போது ‘இம்ரான் கானை இந்தியாவில் பொம்மை என்றுதான் அழைக்கிறார்கள். ஏனென்றால் அவர் மக்களின் வாக்குகளை வாங்கி பிரதமர் ஆகவில்லை. ராணுவத்தின் உதவியால் பதவியில் அமரவைக்கப்பட்டவர். அமெரிக்காவில் அவருக்கு ஒரு மேயரின் அதிகாரம் கூட இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்