ஆவின் வெண்ணை, நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (08:59 IST)
ஆவின் வெண்ணை, நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்திலுள்ள திருக்கோயில்களுக்கு பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு பயன்படுத்த ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே வெண்ணெய் மற்றும் நெய் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து கோவில்களிலும் பிரசாதம் மற்றும் இதர சேவைகளுக்கு தற்போது பல்வேறு நிறுவனங்களில் இருந்து நெய் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் மூலம் மட்டுமே இனிமேல் திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்களுக்கும் மற்ற இதர சேவைகளுக்கும் வெண்ணெய் மற்றும் நெய் பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் திருக்கோயில் ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்