நான் ஒரு ஏழைத் தந்தையின் மகன்.. விதவிதமாக உருட்டிய எலான் மஸ்க்! - வீடியோவில் வெளியான குட்டு!

Prasanth Karthick
வெள்ளி, 31 ஜனவரி 2025 (13:15 IST)

உலக பெரும் பணக்காரர்களில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க் தான் ஒரு ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்ததாக பேசியிருந்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர்.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என உலகளவில் கொடிக்கட்டி பறந்து வரும் தொழிலதிபர் எலான் மஸ்க். 2010களின் ஆரம்பத்தில் மார்வெலில் வரும் சூப்பர்ஹீரோ அயர்ன் மேனுக்கு நிகராக பில்டப் செய்யப்பட்டு வந்த எலான் மஸ்க், தற்போது நகைச்சுவை நாயகனாக மாறியுள்ளார் இணைய சமுதாயத்திற்கு. அதற்கு காரணம் அவரது பிற்போக்குதனமான பேச்சுகளும், டிவிட்டர் தளத்தை வாங்கி அவர் செய்த அக்கப்போர்களும்தான் என பேசிக் கொள்ளப்படுகிறது.

 

இந்நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக ஒரு பேட்டியில் பேசியிருந்த எலான் மஸ்க், தான் தனது சிறுவயதில் ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையையே வாழ்ந்து வந்ததாகவும், ஏழ்மையில் கஷ்டப்பட்டதாகவும் கூறியிருந்தார். தனது தந்தை நடத்தி வந்த எலெஜ்ட்ரிக் கடை வருமானம் குறைந்து திவாலான நிலையில் தன்னையும், தன் அண்ணனையுமே நம்பி இருந்தார் என்றும் பேசியிருந்தார்.

 

ஆனால் சமீபத்தில் எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் ஒரு பேட்டியில் அளித்த பதிலில் எலான் மஸ்க்கின் குட்டு வெளிப்பட்டுவிட்டது. அதில் எரால் மஸ்க், தனது மகன் எலான் மஸ்க் பள்ளிக்கூடத்திற்கே ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வான் என்றும், அவனது 26 வயதிலேயே 48 வயதுடையவரிடம் என்னென்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் இருந்ததுடன், தனி வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக கூறியுள்ளார்.

 

இந்த வீடியோவை பகிர்ந்து தற்போது எலான் மஸ்க்கை கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள், பள்ளிக்கு போவதற்கு சைக்கிள் கூட இல்லாமல் ரோல்ஸ் ராய்ஸ் காரில் போவது எவ்வளவு கொடுமையான வாழ்க்கை என கிண்டல் செய்து வருகின்றனர்

 

Edit by Prasanth.K

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Ahmad Mahmood Show (@ahmadmahmoodshow)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்