டிக்டாக் செயலி தடை நிறுத்தி வைக்கப்படுகிறதா? டிரம்ப் அதிரடி முடிவு..!

Mahendran

வியாழன், 16 ஜனவரி 2025 (11:54 IST)
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவு எலான் மஸ்க்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிக் டாக் செயலியில் பதிவாகும் தகவல்கள் சீன அரசுடன் பகிரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்க அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த செயலிக்கு தடை விதித்தது. மேலும், டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்தால் மட்டுமே தடை நீக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஆனால், அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்போவதில்லை என்று டிக் டாக் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதையடுத்து, புதிதாக அமெரிக்க அதிபர் பொறுப்பேற்க உள்ள டிரம்ப், அந்த தடையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அவகாசமாக 90 நாட்கள் வழங்கப்பட்டு, அந்த காலத்திற்கு தடை நிறுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் விற்பனை செய்யவில்லை என்றால், தடை மீண்டும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்