குதிரை சவாரி செய்த பிரபஞ்ச அழகி போட்டியாளர் மரணம்!

Webdunia
சனி, 6 மே 2023 (18:20 IST)
ஆஸ்திரேலியாவில் குதிரை சவாரியின்போது ஏற்பட்ட விபத்தில் பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாடல் அழகி சியன்னா வெயிர்(23).  ஆங்கில இலக்கியம் மற்றும் சைக்காலஜி ஆகியவற்றில்  இளங்கலை பட்டம் பெற்றுள்ள அவர்,  கடந்தாண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு இறுதி போட்டியாளராகத் தேர்வானார்.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் வின்ட்சார் போலோ என்ற கிரவுண்டில் குதிரை சவாரி மேற்கொண்டபோது அவரது  குதிரை சரிந்து சரிந்து விழுந்தது.
இதில், சியன்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.  பல வாரங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்