ஹைதி அதிபர் படுகொலை; அமெரிக்கர்களுக்கும் தொடர்பு! – அதிகாரத்தை கையில் எடுக்கும் ராணுவம்!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (13:19 IST)
ஹைதி நாட்டு அதிபர் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் அமெரிக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதன் அதிபரான ஜோவனல் மொயிஸ் நேற்று முன்தினம் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 4 பேரை அந்நாட்டு போலீஸார் கடந்த புதன்கிழமை சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் 28 பேர் கொண்டு குழு ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 15 கொலம்பியர்கள் மற்றும் 2 அமெரிக்கர்கள் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 8 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஹைதியில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரத்தை ராணுவம் கையில் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்