ஆகஸ்டு இறுதியில் மொத்தமா வெளியேறிடுவோம்! – ஆப்கனுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்!

வெள்ளி, 9 ஜூலை 2021 (08:32 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு இறுதிக்குள் மொத்தமாக வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தன. இதற்காக ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் அமெரிக்க ராணுவ தளங்களும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தலீபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்ப பெறும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.

ஒப்பந்தத்தின்படி அமெரிக்க மெல்ல ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “தலீபான்கள் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அவர்களை சமாளிக்கும் திறன் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு உள்ளது என நம்புகிறோம். எனவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கை ஆகஸ்டு 31ல் முழுமையாக முடிவுக்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்