சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு! 10 பேர் பலி!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (09:00 IST)
அமெரிக்காவில் நடந்த சீனா புத்தாண்டு கொண்டாட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள பார்க் நகரில் கார்வே அவென்யூ என்ற ஓட்டல் உள்ளது. இது செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமானது. சீன புத்தாண்டு இந்த முறை முயல் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

நேற்று இரவு சீன புத்தாண்டை கொண்டாடும் விதமாக கார்வே அவென்யூவில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

உடனடியாக சம்பவம் இடம் விரைந்த போலீஸார் மர்ம நபரை பிடிக்க முயன்றபோது அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ள நிலையில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்