ஆல்கஹால் போதையில் உயிர்வாழும் தங்க மீன்கள்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:20 IST)
பனி உறைந்த ஏரிகளில் தங்க மீன்கள் உயிர் பிழைக்க ஆல்கஹால் பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 

 
வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் தங்க மீன்கள் சில மாதங்கள் வரை உயிர் வாழும் ஆற்றல் பெற்றது. அந்த ஆற்றலுக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த மீன்கள் ஆக்சிஜன் இல்லாத நிலையில் லேட்டிக் என்ற அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பின்னர் ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேறுகின்றன. ஆக்சிஜன் இல்லாத நிலையில் மீன்கள் ரத்தத்தில் சரியாக பாதி அளவு ஆல்கஹால் உள்ளதாம். 
 
க்ரூசியன் க்ராப் என்ற வகை மீன்தான் இதுபோன்ற கடினமான சூழலில் வாழக்கூடிய மீன் வகை. தங்க மீன்கள் இந்த க்ரூசியன் க்ராப் மரபில் வந்ததால் இதுவும் அதுபோன்ற கடினமான சூழலில் வாழக்கூடிய தன்மை உடையது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்