கேரளாவில் மலப்புரம் என்ற பகுதியை சேர்ந்த பெண் திருமணத்திற்கு பிறகு கணவனை பிரிந்து, ஒரு ஆண்டுக்கும் மேல் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், அந்த பெண்ணின் தந்தையின் செல்போன் மூலம் அவருடன் தொடர்பு கொண்ட கணவர், மூன்று முறை "தலாக்" என்று கூறி விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவருடைய கணவன் மீது, இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.