தெருவீதிகளில் பெண்களை கேலி, கிண்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களுக்கு உடனடியாக ஸ்பாட் ஃபைன் விதிக்க பிரான்ஸ் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.
சாலைகளில் செல்லும் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கும் நடவடிக்கைகள் காலதாமதம் ஆகின்றது. ஒருசிலர் இந்த நடவடிக்கைகளில் இருந்து தப்பித்தும் விடுகின்றனர்.
இந்தநிலை தொடராமல் இருக்க பெண்களை கிண்டல் செய்வது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ஸ்பாட் ஃபைன் போடும் புதிய சட்டம் ஒன்றை பிரான்ஸ் அரசின் பெண்கள் நல அமைச்சர் கொண்டு வந்துள்ளார். இதற்கு அந்நாட்டு அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.
இந்த சட்டத்தை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நடிகை ராதிகா இந்த சட்டம் நல்ல ஐடியா என்றும், இதை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.