உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (19:35 IST)
ஐநா அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு என்ற சர்வே நடத்தியதில் இந்தியாவுக்கு 133வது இடம் கிடைத்துள்ளது.

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற சர்வேயை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த சர்வேயின் முடிவு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த சர்வேயின் முடிவுப்படி பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக சந்தோஷமாக வாழும் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. பின்லாந்தை அடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

மொத்தம் 156 நாடுகள் இந்த சர்வேயில் பங்கேற்றிருந்த நிலையில் இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு கடந்த ஆண்டு 122வது இடம் கிடைத்த நிலையில் இந்த ஆண்டு 11 இடங்கள் பின் தங்கியுள்ளது என்பது கூறிப்பிடத்தக்கது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவைகளை கொண்டே இந்த சர்வே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்