பிரான்ஸில் உச்சகட்ட வன்முறை...200 போலீஸார் காயம்...1000 பேர் கைது!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (18:16 IST)
பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று  4 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் அதிபர் இமானுவேல் மேக்ரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நாண்டர் புற நகரில் உள்ள ஒரு பகுதியில் விதியை மீறி செயல்பட்டதாக இளைஞர் நீல்( 17வயது) என்பவரை   போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்,

இதனால் மக்கள் கோபமடைந்து போராட்டத்தில் கிறங்கியுள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர்,  மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதால், பள்ளிகள், போலீஸ் ஸ்டேசன் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில்   நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், 1000 க்கும்  மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வன்முறையைக் கட்டுப்படுத்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்