காவல்துறை டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

வியாழன், 29 ஜூன் 2023 (11:57 IST)
காவல்துறை டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் திரு. ரோஜா ராஜசேகர் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
விடியா அரசையும், பொம்மை முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலினையும் தூக்கிப் பிடித்து நிறுத்தும் இயக்கங்களில் ஒன்றான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலாளர் திரு. ரோஜா ராஜசேகர் என்பவர் காவல்துறை கொடுத்த தொடர் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட கொடுமை நடந்துள்ளது.
 
அவருடைய மனைவியையும் சம்பந்தமே இல்லாமல் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான திரு. ராஜசேகர் ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 
 
போராட்ட குணம் உள்ள பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த திரு. ராஜசேகர் தற்கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கை, தனி அமைப்பை நியமித்து விசாரிக்க வேண்டும்; அவர்களுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும்; 
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்