2 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்ஸா? புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (19:34 IST)
2 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்ஸா? புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை
 2 லட்சம் அரச ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்ய இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் ட்ரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அரசு ஊழியர்கள் என்றாலே பணி நிரந்தரம் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து நாட்டில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அரசின் செலவைக் குறைப்பதற்காக 2 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ஊழியர்களையும் 2024 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் ஊழியர்கள் என மொத்தம் 2 லட்சம் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ் எடுத்துள்ள இந்த முடிவு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்