உலகின் முதல் கொரோனா மாத்திரைக்கு அனுமதி வழங்கிய இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (11:21 IST)
இங்கிலாந்து கொரோனா தடுப்பு வைரல் மாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நாடுகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் முதலாக கொரோனா மாத்திரைக்கு பிரிட்டன் அரசு அனுமதி அளித்துள்ளது. மால்னுபிராவிர் என்ற பெயர் கொண்ட மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த மாத்திரையை கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கிய முதல் 5 நாட்களுக்கு நாளுக்கு இரு வேளை விழுங்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பாதிப்பு 50 சதவீதம் வரை குறைவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்