சூர்யவன்ஷி படம் வெளியாவதில் சிக்கல்… மல்டிப்ளக்ஸ்களோடு மோதல்!

வெள்ளி, 5 நவம்பர் 2021 (10:23 IST)
அக்‌ஷய் குமார் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படம் இன்று வெளியாக உள்ளது.

அக்‌ஷய் குமார், ரண்வீர் சிங் மற்றும் அஜய் தேவ்கன் இயக்கத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக சூர்யவன்ஷி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான முன்பதிவுகள் நேற்றே தொடங்கிவிட்டன.

ஆனால் இந்தியாவின் இரு பெரும் மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்க நிறுவனங்களாக பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகியவற்றில் மட்டும் இன்னும் முன்பதிவு தொடங்கவில்லை. வசூலைப் பகிர்ந்துகொள்வதில் இந்த இரு நிறுவனங்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இன்னும் முன்பதிவு ஆரம்பமாகவில்லை என சொல்லப்படுகிறது. இவ்விரு நிறுவனங்களுக்கு சொந்தமான 1500 திரையரங்குகள் இந்தியாவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்