அமெரிக்காவில் எமர்ஜென்ஸி: வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தல்

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (08:26 IST)
அமெரிக்காவில் திடீரென ஒரு சில மாகாணங்களில் மட்டும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் இரண்டு அடிக்கு மேலாக பனிக்கட்டி தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை என்றும் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களான நியூயார்க் நியூஜெர்சி உள்பட பல மாகாணங்களில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீட்டைவிட்டு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அமெரிக்காவில்  போர்க்கால அடிப்படையில் பனிப்புயலில் சிக்கியவர்களை மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்