இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே இந்திய நேரப்படி அதிகாலை 5.14 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கல் இன்னும் வெளியாகவில்லை.
அதேபோல இன்று அதிகாலை 2.36 மணி அளவில் நேபாளத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்க சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edit by Prasanth.K