சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்.. 100 காவலர்கள் டிஸ்மிஸ்..!

Siva

புதன், 26 பிப்ரவரி 2025 (18:05 IST)
சாம்பியன்ஸ் டிராபியில்  பாகிஸ்தான் அணி வெளியேற்றப்பட்ட விரக்தியில், அங்குள்ள காவலர்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு பணி செய்ய மறுத்ததை அடுத்து, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாகிஸ்தானில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்தது. நாளை அந்த அணி வங்கதேச அணியுடன் விளையாட உள்ளது. அந்த போட்டியில் வென்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற முடியாது.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து வந்த வீரர்களுக்கு பாதுகாப்பு பணி செய்ய வேண்டிய காவலர்கள், அந்த பணியை செய்ய மறுத்ததாகவும், “பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்ட பிறகு எதற்காக நாம் பணி செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
 
இதனால், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட மறுத்த 100 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்