பேருந்தில் பெண் பலாத்காரம்.. ட்ரோன்கள், மோப்ப நாய்களை பயன்படுத்தி 75 மணி நேரத்தில் குற்றவாளி கைது..

Mahendran

வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (12:53 IST)
பேருந்துக்காக காத்திருந்த இளம் பெண்ணை பேருந்திற்குள் அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியை போலீசார் 75 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் புனே நகரில் நடைபெற்றுள்ளது.
 
புனே பேருந்து நிலையத்தில் 26 வயது பெண், பேருந்துக்காக காத்திருந்த நிலையில், மர்ம நபர் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி ஏமாற்றிக் கொண்டு அரசு பேருந்தில் அழைத்துச் சென்றார். பின்னர், பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்றார்.
 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் 75 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், மோப்பநாய் பிரிவு, ட்ரோன்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
 
குற்றம் நடந்த இடத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, எட்டு அணிகளாக பிரிந்து காவல்துறையினர் செயல்பட்டனர். மேலும், குற்றவாளியைப் பற்றி தகவல் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், குற்றவாளியின் சகோதரரை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து குற்றவாளியின் சட்டையை வாங்கி, அந்த சட்டையில் இருந்த சென்ட் வாடையை மோப்ப நாயை வைத்து மோப்பம் செய்து தேடுதல் வேட்டையை செய்தனர். அப்போதுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்