எலான் மஸ்க் இமெயிலை கண்டுக்காதீங்க.. ட்ரம்ப் அடித்த பல்டியால் குழப்பத்தில் அரசு ஊழியர்கள்!

Prasanth Karthick
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (09:55 IST)

அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சி அமைத்த நிலையில் அவரது நண்பரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் DOGE அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்க அரசு ஊழியர்களின் செயல்பாடுகளை கவனிக்கும் இந்த அமைப்பு ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

சமீபத்தில் பல ஆயிரம் அமெரிக்க அரசு பணியாளர்களை தாமாக முன்வந்து பணி விலகல் செய்யுமாறு இமெயில் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் வாரம்தோறும் மேற்கொள்ளும் பணிகளை மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் என்றும், அப்படி செய்யாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எலான் மஸ்க் எச்சரித்து இருந்தார்.

 

எலான் மஸ்க்கின் இந்த தொல்லையை பொறுத்துக் கொள்ள முடியாமல் பலர் வீதிகளில் அவருக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் எலான் மஸ்க் அறிவித்த இந்த ஒருவார காலக்கெடுவை நீக்க ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அரசு பணியாளர்கள் மீது ஏற்படுத்தும் கெடிபிடிகள் அரசு எந்திரத்தை சோர்வுற செய்யும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகததால் இமெயில் அனுப்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ஊழியர்கள்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்