கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கும் சட்டம் :எந்த நாட்டில் தெரியுமா?

sinoj
திங்கள், 1 ஏப்ரல் 2024 (21:34 IST)
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கஞ்சா  பயன்பாட்டிற்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்ததாகவும், விற்பனை செய்ததாகவும் சிலரை போலீஸார் கைது செய்ததாகக் தகவல் வெளியானது.
 
பொதுவாக இந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு  இத்தனை கட்டுப்பாடுகள் உள்ளதற்கு இளைஞர்கள், சிறுவகள், மாணவர்கள் உள்ளிட்ட யாரும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது, இதனால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பது முக்கியமாகக் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டில் 18 வயதினோர் 25 கிராம் உலர்ந்த கஞ்சா வைத்துக் கொள்ளவும் 3 செடிகள் வரை வீட்டில்  கஞ்சா வளர்க்கவும், அனுமதி அளிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் நாட்டின் பல நகரங்களிலும் நள்ளிரவில் திரண்ட மக்கள் கஞ்சா புகைத்து புதிய சட்டத்திற்கு அமோக வரவேற்பளித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்