ஆப்கனில் இருந்து மக்களை காப்பாற்றும் போது உயிரிழப்பு ஏற்படலாம் - பைடன்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:01 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை கொத்து கொத்தாக மீட்கும் போது, அதில் அபாயங்கள் இல்லாமல் இல்லை என கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
 
வெள்ளை மாளிகையில் பேசிய அவர், இதுவரை அமெரிக்கா 13,000 பேரை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டிருப்பதாகவும், இது வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் மிக சிரமமான மீட்புப் பணி என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு வர விரும்பும் எந்த ஒரு அமெரிக்கரையும் நாங்கள் அவர்களது வீட்டுக்கு அழைத்து வந்து சேர்ப்போம்” என பைடன் கூறினார். இந்த மீட்புப் பணி மிகவும் ஆபத்தானது. இதனால் நம் ஆயுதப் படையினருக்கு ஆபத்து ஏற்படலாம். இந்த மீட்புப் பணி மிகவும் நெருக்கடியான சூழலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பைடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்