அறிகுறிகளே இல்லாமல் ஒமிக்ரான்... ஆப்பிரிக்கா சுகாதாரத்துறை தகவல்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (11:03 IST)
ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 
 
ஓமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் 23 நாடுகளில் பரவி உள்ளது. சாதாரண காய்ச்சல், உடல் வலி, தொண்டை கரகரப்பு போன்றவை ஒமிக்ரான் வைரசின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
 
ஆம், தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குனர் தனது சமீபத்திய பேட்டியில், ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள 19 பேரில் ஒன்ன்று அல்லது இரண்டு பேருக்கு மட்டுமே லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டது. மீத பேரிடம் எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்