தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் பிரேசில் இத்தாலி, பிரேசில் , ஹாங்காங் உள்பட பல நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது என்பதும் இதுவரை இருபத்தி மூன்று நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவி விட்டதாக உலக சுகாதார மைய இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒமிக்ரான் தோற்று பரவிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பதை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்த உறுதியான தகவல் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது