5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல்

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (09:22 IST)
அமெரிக்காவில் 5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஏற்கனவே 18 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் 5 வயது முதல் 15 வயது வரை காண ஃபைசர் தடுப்பூசி தடுப்பு ஊசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
இதனை அடுத்து ஒப்புதலுக்கு பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் மூன்றாவது அலை இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி விடும் என்றும் கூறப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் அமெரிக்காவில் 5 முதல் 11 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட இறுதி ஒப்புதல் தரப்பட்டுள்ளது. ஃபைசர் - பயோடெக்கின் கொரோனா தடுப்பூசிக்கு நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே உணவு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்த நிலையில் தற்போது இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்