வீடுகளுக்கு சென்று தடுப்பூசி திட்டம் - புதுப்புது முயற்சியில் தமிழக அரசு!

செவ்வாய், 2 நவம்பர் 2021 (10:25 IST)
அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வீடு வீடாக நேரில் சென்று தடுப்பூசி திட்டத்தை துவங்கிக்க உள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒன்ரறை மாதத்திற்கும் மேலாக வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வீடு வீடாக நேரில் சென்று தடுப்பூசி திட்டத்தை துவங்கிக்க உள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, கடந்த மாதங்களில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது. 
 
தற்போது வார நாட்களில் கொரோனா தடுப்பூசி போடுகிறவர்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் டாக்டர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்