மகளிருக்கு மாதம் ரூ.1000.. குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (16:16 IST)
மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் ஆட்சிக்கு வந்த பின்னரும் இன்னும் அந்த திட்டம் அறிவிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் தாட்டி இருந்தன. 
 
இந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து ஆலோசனை இன்று நடைபெற்ற நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாதம் ரூபாய் 1000 திட்ட த்தின் பயனாளிகளை குடும்ப அட்டை, வயது வரம்பு, ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமை தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்துள்ளதாக தெரிகிறது. 
 
மேலும் மகளிர் உரிமை தொகை தொடர்பாக ரேஷன் கடை அளவில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு பயனாளி கூட விடுபடாமல் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்