டிரம்ப் வெற்றியில் ரஷ்ய சதி: சிஐஏ சந்தேகம்!!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (10:46 IST)
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி கண்டார்.


 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிபெற, ரஷ்யா உதவி புரிந்ததாக, சிஐஏ தெரிவித்த தகவலுக்கு, எஃப்பிஐ எனப்படும் அந்நாட்டு புலனாய்வுப் போலீசார் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் ரஷ்ய அதிபர் புடினுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளதாகவும் சிஐஏ சந்தேகம் எழுப்பியது.
 
இந்த கருத்துக்கு, தற்போது எஃப்பிஐ எனப்படும் அமெரிக்கப் புலனாய்வுப் போலீசாரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எஃப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 
 
இந்த சந்தேகத்திற்கு, டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்