இனிமேல் உங்களுக்கு விசாவே கிடையாது! – தென்கொரியா மீது வன்மத்தை கொட்டும் சீனா!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (10:46 IST)
சீன மக்களுக்கு தென்கொரியா கொரோனா கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் பதில் நடவடிக்கையாக தென்கொரியாவுக்கு சீனா விசாவை நிறுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக சீனாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றது. ஆனால் சீனா கொரோனா குறித்த விவரங்களை உலக சுகாதார அமைப்புடன் பகிர மறுத்து வருகிறது. மேலும் கடந்த 8ம் தேதி முதலாக சர்வதேச பயணத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகளையும் சீனா தளர்த்தியுள்ளது.

இதனால் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு உலக நாடுகள் பல கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது பாரபட்சமான நடவடிக்கை என சீனா கண்டனம் தெரிவித்ததோடு பதில் நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறியிருந்தது.

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா கட்டாய கொரோனா பரிசோதனை செய்து வரும் நிலையில் தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை சீனா நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்