அதிகரித்த கொரோனா - பள்ளிகளை மூடி ஆன்லைன் வகுப்புகள்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (12:02 IST)
சீனாவில் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய நிலையில் தற்போது வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். அவ்வபோது கொரோனா குறைந்தாலும் மீண்டும் புதிய அலைகள் தோன்றுவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
 
சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சீனாவின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் மிகப்பெரும் வர்த்தக நகரமான ஷாங்காயில் கொரோனா காரணமாக பல பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
 
ஷாங்காயில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் 228 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஒருவர் மூலம் மற்ற அனைவருக்கும் தொற்று பரவியது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதி, உணவு விடுதி உள்ளிட்டவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்