3,000 நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!

செவ்வாய், 31 மே 2022 (10:48 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
 
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வருகிறது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 58 ஆயிரத்து 87 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,134 பேர் முழுமையாக நலம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 26 லட்சத்து 15 ஆயிரத்து 574 பேர் குணமடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று இந்த எண்ணிக்கை மேலும் 185 உயர்ந்து உள்ளது. தற்போது 17,883 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா காரணமாக மேலும் 19 பேர் இறந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்