சீனா: தொழிற்சாலை மற்றும் மருத்துவமனையில் தீ விபத்து 32 பேர் பலி

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (22:07 IST)
சீனாவில் இன்று  ஓரே நாளில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை  ஆகியவற்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் அதிபர் ஜிங் பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாட்டின் தலை நகர் பீஜிங்கில் பெங்டாய் மாவட்டத்தில்  உள்ள மருத்துவமனையில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இவ்விபத்தில் 21 பேர் உடல் கருகி பலியாகினர். இதுகுறிடத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் இருந்த  71 நோயாளிகளை பத்திரமாக மீட்டு, வேறு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதேபோல், ஜெஜியாங் பகுதியில் ஜீன்ஹூவா என்ற நகரில் உள்ள  கதவு, மேஜை என்று மரப்பொருட்கள் தயாரிக்கப்படும் பிரபல  தொழிற்சாலை  ஒன்றில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், 11 பேர் பலியாகினர். இரு பகுதிகளில் நடைபெற்ற தீ விபத்து பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்