மத்திய அமைசச்ர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (18:52 IST)
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சில விஐபிக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இன்று நடைபெற்ற இந்தியா ஸ்டீல் 2023 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்