குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடை! பிரதமர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

Prasanth Karthick
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:15 IST)

தற்போது குழந்தைகள், இளைஞர்கள் இடையே சோசியல் மீடியா பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் குழந்தைகள் சோசியல் மீடியாவை பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

 

தொழில்நுட்ப வளர்ச்சியால் சமீப காலங்களில் குழந்தைகள் செல்போனை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும் வயது வித்தியாசம் இன்றி பலரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இவ்வாறாக குழந்தைகள் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை செல்போன்களிடம் இருந்து மீட்டு, நீச்சல் குளங்கள், விளையாட்டு திடல்களில் குழந்தைகளை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ள அவர், விரைவில் இந்த குழந்தைகளுக்கான சமூக வலைதள பயன்பாட்டு தடை அமலுக்கு வரும் என்றும், எந்த வயது வரை குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை தடை செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஸ்வீடன் நாட்டிலும் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்