வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் - பா.சிதம்பரம்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:35 IST)
தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவுநாள் சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ளது. இதில், பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் 28-12-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''வைக்கம் போராட்டத்தின் நூறாண்டு நிறைவு நாள் 28-12-2023 அன்று சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது தந்தை பெரியார் தலைமையேற்ற புரட்சியின் ஆண்டு 1924 என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே 1936 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 'ஆலயப் பிரவேசப் பிரகடனம்' அறிவிக்கப்பட்டது தந்தை பெரியாரின் புரட்சிச் சிந்தனைகள், மன உறுதி, தொலைநோக்கு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் 28 டிசம்பர் தான் காங்கிரஸ் மகாசபையின் தொடக்க நாள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

வைக்கம் போராட்ட நாள் சென்னையில் கொண்டாடப்படும் அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் பேரணி நாக்பூரில் நடைபெறுகிறது''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்