பிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு மோடி நன்றி!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (09:59 IST)
பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று முன்தினம் பிரேசில் சென்றார்.

பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான 11வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனேரோவை சந்தித்து பேசியுள்ளார் மோடி.

அப்போது இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவு நிலை, பாதுகாப்பு மற்றும் நட்புறவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் 71வது குடியரசு தின விழாவிற்கு வருமாறு பொல்சனேரோவுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவரும் அழைப்பை ஏற்று வருவதாக தெரிவித்துள்ளாராம்.

மேலும் பிரேசில் வரும் இந்தியர்களுக்கு விசா அவசியமில்லை என்று பிரேசில் அதிபர் அறிவித்துள்ளதையும் பிரதமர் மோடி வரவேற்றிருக்கிறார். இதன்மூலம் இனி பிரேசில் நாட்டிற்கு விசா இல்லாமலே பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்