பாகிஸ்தானில் பப்ஜி மோகத்தால் குடும்பத்தையே சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குழந்தைகள், சிறுவர்களிடையே ஸ்மார்போன் மோகம் அதிகரித்துள்ளது. முக்கியமாக சிறுவர்கள் பப்ஜி போன்ற சாகச ஆன்லைன் கேம்களை தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் அதிர்ச்சியூட்டுபவையாக உள்ளன.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பப்ஜி விளையாடுவதில் தீராத ஆர்வம் கொண்டவனாக இருந்துள்ளான். சமீபத்தில் சிறுவனின் குடும்பத்தினரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் சிறுவன் மட்டும் தப்பித்திருந்ததால் சிறுவனிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது தனது குடும்பத்தை தானே சுட்டுக் கொன்றதை சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.