தற்கொலை படையாக மாறிய ஆசிரியை! – உலகை உலுக்கிய பலுசிஸ்தான் சம்பவம்!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (15:59 IST)
பலுசிஸ்தான் நாட்டை ஆக்கிரமித்து வரும் பாகிஸ்தானுக்கு எதிராக மெத்த படித்த பெண் ஆசிரியை தற்கொலை படையாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் மூன்று சீனர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட விசாரணையில் பெரும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன.

கராச்சியில் மனித வெடிகுண்டாக மாறி தாக்குதலை நடத்தியவர் பலுசிஸ்தானை சேர்ந்த 30 வயது பெண் என தெரிய வந்துள்ளது. ஷாரி பலோச் என்னும் அந்த பெண் பலுசிஸ்தானில் எம்.எஸ்.சி, எம்.ஃபில் படித்து அங்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பலுசிஸ்தான் நாட்டின் மீது பாகிஸ்தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அதிகாரம் செய்து வருவதுடன், அங்குள்ள மக்களையும் கொடுமைப்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்து வருகின்றது.

பாகிஸ்தானுக்கு எதிராக பலோச் லிபரல் ஆர்மி என்ற அமைப்பில் இணைந்த ஃபிடாயி ஷாரி இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் தன்னை தானே அழித்துக் கொண்டு 4 பாகிஸ்தானியர்களையும் கொன்றுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு குழந்தைகள் இருப்பதால் இதை அவர் செய்ய தேவையில்லை என பலோச் லிபரல் ஆர்மி சொன்னதாகவும், ஆனால் அவர் தான் இதை செய்வதாக கூறி செய்ததாகவும் கூறப்படுகிறது. இளம் பெண் ஆசிரியை தற்கொலை படையாக மாறிய சம்பவம் உலகம் முழுவதையும் பலுசிஸ்தானை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்