பிரிட்டன் பாராளுமன்றம் அருகே பேபி டிரம்ப்

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (21:09 IST)
பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றம் அருகே பேபி டிரம்ப் பலூனை பறக்க விட்டுள்ளனர்.

 
லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின்போது பிரிட்டன் பிரதமர் தெரசா மேவை கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இதானல் பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப்-க்கு எதிர்ப்பு கிளம்பியது.
 
சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகின்றது. நேற்று பிரதமர் தெரசா மே அளித்த விருந்தில் பங்கேற்க டிரம்ப் வந்தபோது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த டிரம்ப் எதிர்ப்பாளர்கள் இன்று லண்டன் நகரில் குவிந்துள்ளனர். இதற்கிடையில், டிரம்ப்பை கேலி செய்யும் வகையில் பாராளுமன்ற சதுக்கத்தில் ‘டிரம்ப் பேபி’ பலூன் ஒன்றை பறக்கவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்