கின்னஸ் சாதனை செய்த நபர் நகங்களை வெட்டுகிறார் - ஏன் தெரியுமா?

புதன், 11 ஜூலை 2018 (16:21 IST)
66 ஆண்டுகளாக நகம் வளர்த்து கின்னஸ் சாதனையில்  இடம் பெற்ற நபர் தன்னுடைய நகங்களை இன்று வெட்ட இருக்கிறார்.

 
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால். இவர் கடந்த 1952ம் ஆண்டு முதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல் நீளமாக வளர்க்க தொடங்கினார். தற்போது அவருக்கு 88 வயதாகிறது. அவரின் நகங்களின் நீளம் 909.6 செண்டி மீட்டர்களாக உள்ளது.
 
உலகிலேயே மிக நீளமான நகத்தை கொண்டவர் என்பதற்காக கடந்த 2016ம் ஆண்டு இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

 
இந்நிலையில், 66 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீதர் தன்னுடைய நகங்களை வெட்டுகிறார். அமெரிக்காவின் மிகவும் பிரபலமான ‘ரிப்ளிஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்கும் தொலைக்காட்சி நிறுவனம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சதுக்கத்தில் ஆச்சர்யப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியத்தை அமைத்துள்ளது.
 
இந்த அருங்காட்சியத்தில் ஸ்ரீதரின் நகத்தை வைக்க விரும்பிய அந்நிறுவனம், இது தொடர்பாக ஸ்ரீதரை தொடர்பு கொள்ள, அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.  எனவே, ஸ்ரீதர் விமானம் மூலம் நியூயார்க் சென்றுள்ளார். 
 
செய்தியாளர்கள் முன்னிலையில் இன்று அவரின் நகங்கள் இன்று வெட்டப்பட இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்