ஆஸ்திரேலியாவில் இந்துக் கோவில் மீது தாக்குதல்

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (21:42 IST)
ஆஸ்திரேலிய நாட்டில் மீண்டும் இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் இந்துக் கோவிலான சிவ விஷ்ணு கோவில்  ஒன்று இருக்கிறது.

இந்தக் கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், இந்த கோயிலில், இந்தியர்களுக்கு எதிராக சில வாசகங்கள் எழுதி, ஒரு வாரத்தில் இரண்டாம் முறையாக  தாக்குதல்  நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகையொட்டி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்