பங்குச்சந்தையில் மைக்ரோசாஃப்டை முந்திய ஆப்பிள்.. ஏஐ டெக்னாலஜி செய்த மாயமா?

Siva
வியாழன், 13 ஜூன் 2024 (16:47 IST)
நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் முந்தி இருப்பதாகவும் இதற்கு ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

நேற்று ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 4% உயர்ந்தது என்றும் அதன் சந்தை மதிப்பு 3.29  ட்ரில்லியன் டாலரை எட்டி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது.

சமீபத்தில் நடந்த ஆப்பிள் உலக டெவலப்பர் மாநாட்டில் ஏஐ குறித்து அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டது என்பதும் அதன் காரணமாகத்தான் அமெரிக்க நாட்டின் பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகிறது என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் சிரிவாய்ஸ் அசிஸ்டன்ட், மெசேஜ், மின்னஞ்சல், காலண்டர், மூன்றாவது தரப்பு செயலியுடன் ஏஐ டெக்னாலஜி உதவியுடன் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அனைத்தையும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிக் குக் விவரித்த நிலையில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் மிக அதிகமாக உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்